காலடியில் காலடி பதிப்போமா!
ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி கிருஷ்ணர் கோவிலில் அட்சய திரிதியை நன்னாளில் கனகதாரா யாகம் நடக்கிறது. ஆதிசங்கரர் சிறுவராக இருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிச்சை கேட்டார். அவளும் தன் கணவர் ஏகாதசி விரதம் முடித்து உண்பதற்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக்கனியை கொடுத்தாள். அதைக் கண்டு மனம் இளகிய சங்கரர், நல்லவர்களிடம் செல்வம் இருந்தால் உலகிற்கே நன்மை உண்டாகும் என்ற எண்ணத்தில் லட்சுமி மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். அப்போது லட்சுமியருளால் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. இதன் அடிப்படையில் எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணர் கோவிலில் மே 7 முதல் 11 வரை கனகதாரா யாகம் நடக்கிறது. இதில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகள் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி பூஜிப்பர். மே 9 அட்சய திரிதியை அன்று காலை 9 மணிக்கு லட்சுமிக்கு தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளால் அபிஷேகம் நடக்கும். அலைபேசி: 093888 62321.