பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை
ADDED :3657 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் மூன்றாம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20ம் தேதி காலை தேர் திருவிழாவும் 22ம் தேதி மதியம் மட்டையடி உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.