பாலமலையில் அன்னவாகன உற்சவம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை கோவிலில் சித்ரா
பவுர்ணமி தேர்திருவிழாவையொட்டி அன்னவாகனத்தில் ரங்கநாதர் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு
தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும்
சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்திருவிழா நடக்கும். இந்தாண்டுக்கான திருவிழா
ஏப்., 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அன்னவாகனத்தில்
சுவாமி ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து,
அனுமந்த வாகனம், கருட வாகனம், செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாண
உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இம்மாதம், 21ல் மாலை,
3:00 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடக்கிறது.
மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இம்மாதம், 22ல்
பரிவேட்டையும், குதிரை வாகன உற்சவம், 23ல் சேஷ வாகன உற்சவம், தெற்போற்சவம்,
24ல் சந்தான சேவை சாற்றுமுறை தீர்த்தவாரி நடக்கிறது. விழாவையொட்டி தினமும்
மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்திலிருந்து
கோவில் வந்து, செல்ல வாகன வசதி உள்ளது.