உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோவில் செடல் திருவிழா

தேவி கருமாரியம்மன் கோவில் செடல் திருவிழா

புதுச்சேரி: தேவி கருமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். திப்புராயப்பேட்டை தேவி கருமாரியம்மன் கோவிலில் 35ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த ௧௫ம் தேதி மதியம் 3 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். ஐந்தாம் நாள் விழாவில் 9.00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டும், இரவு 7.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !