வால்பாறை சாய் ஜெயந்தி விழா நிறைவு
ADDED :3501 days ago
வால்பாறை: வால்பாறை ஸ்ரீசாய் ஜெயந்தி இரண்டாமாண்டு நிறைவு விழாவில், சுவாமி பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், ஸ்ரீசாய்ஜெயந்தி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் ஆன்மிகசொற்பொழிவாளர் விஜயகுமார் பக்தி சொற்பொழிவாற்றினார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீசாய் எழுந்தருளி, நகரில் முக்கிய வீதி வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை துவாரகாமாயி அறக்கட்டளை நிறுவனர்கள் சாய்செல்வரத்தினம், பிரவிணா உட்பட பலர் செய்திருந்தனர்.