கோடை வெப்ப தாக்கத்தைக் குறைக்க.. திருமலையில் வசந்த உற்சவம்!
ADDED :3499 days ago
திருப்பதி: கோடை வெப்ப தாக்கத்தைக் குறைக்க, திருமலை, ஏழுமலையானுக்கான, மூன்று நாள் வசந்த உற்சவம், இன்று துவங்குகிறது.கோடை வெப்ப தாக்கத்தைக் குறைக்க, திருமலை, ஏழுமலையானுக்கு, சித்திரை மாதத்தில் நடத்தப்படும், மூன்று நாள் வசந்த உற்சவம், திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில், இன்று துவங்குகிறது. தினமும், மதியம், 3:00 மணிக்கு மேல், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, மலையப்ப சுவாமிக்கு, மூலிகை கலந்த நீரால், ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படும். மூன்று நாட்களும், மதியம், மாலை நேரங்களில் நடக்கும், அனைத்து ஆர்ஜித சேவைகளையும், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.