உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் விநாயகருக்கு வெள்ளிக்கவசம்!

பழநி மலைக்கோயில் விநாயகருக்கு வெள்ளிக்கவசம்!

பழநி : பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு 13 கிலோ வெள்ளிக் கவசத்தை, பக்தர் காணிக்கையாக வழங்கினார். தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள இக்கோயில் விநாயகருக்கு முகம், கிரீடம், வயிறு, தந்தம், பாதம், அங்குசம், திருவாச்சி, கர்ண பாத்திரம் உள்ளிட்ட 13 பாகங்களை கொண்ட கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய். இதை பிரசாத ஸ்டால் ஹரிஹரமுத்து காணிக்கையாக வழங்க உள்ளார். நேற்று மாலை பாத விநாயகர் கோயில் முன், கவசம் கொண்டு செல்லப்பட்டது. சதுர்த்தி அன்று, விநாயகருக்கு அணிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !