உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வநாத சுவாமி கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்!

விஸ்வநாத சுவாமி கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேதே விஸ்வநாத சுவாமி கோவிலில் வரும் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.  அதையொட்டி 22ம் தேதி தேவதா அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதல் நடக்கிறது. 23ம் தேதி கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, ருத்தர ஹோமம், வடு பூஜை, தீபாராதனை நடக்கிறது. 24ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.  கும்பாபிஷேக தினமான 25ம் தேதி நான்காம் கால யாகசசாலை பூஜை, நாடி சந்தானம், ரக்‌ஷா பந்தனம், தம்பதி பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும் தொடர்ந்து  யாத்ராதானம், கடம் புறப்படாகி காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !