வன்னியப் பெருமாள் கோவிலில் 25ல் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான, 25ம் தேதி அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 26ம் தேதி, காலை 7:00 மணிக்கு கொடியேற்றம், மாலை இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 27ம் தேதி புருஷசுத்த ஹோமம், சூரியப்பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா, 28 ம் தேதி ஹயக்கிரீவர் ஹோமம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா, 29ம் தேதி சுக்த, லஷ்மி ஹோமம், இரவு கருடசேவை, 30ம் தேதி ராமகாயத்திரி ஹோமம், அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 1ம் தேதி சுதர்சன ஹோமம், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம், இரவு குதிரை வாகத்தில் சுவாமி வீதி உலா, 4ம் தேதி தேர் திருவிழா, மாலையில் தீர்த்தவாரி நடக்கிறது. 6ம் தேதி விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீனிவாசன் செய்து வருகின்றார்.