உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம் அரசுத்துறை அலுவலர்கள் ஆலோசனை

திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம் அரசுத்துறை அலுவலர்கள் ஆலோசனை

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம் குறித்து, துறை அலுவலர்களின் கூட்டுக்கூட்டம் நடந்தது. திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மின்துறை உதவி பொறியாளர் யுவராஜ், திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ரோஷணை இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், வருவாய் ஆய்வாளர் லட்சாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேர் வரும்போது ௧௦ அடி துாரத்திற்கு வளையம் அமைத்து போலீஸ் துறை மூலமாக பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேரோட்டத்தின் போது, பொது மக்கள் கூட்டத்தை சரி செய்து, நெரிசல் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். தேரோட்டத்தின்பாதையில், குறுக்காக செல்லும் மின்சார ஒயர்களையும், கேபிள் ஒயர்களையும், தொலைத் தொடர்புத்துறை ஒயர்களையும் தடையில்லாமல் தேரோட்டம் செல்வதற்கு வசதியாக ஒயர்களை நீக்க வேண்டும். நகராட்சி சார்பில் சுகாதாரப்பணி, பாதை முழுவதும் குடிநீர் வசதி ஏற்படுத்த தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !