ராமேஸ்வரம் கோயிலில் டி.ஜி.பி., தரிசனம்
ADDED :3659 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி., கிருஷ்ணா சவுத்ரி, அவரது மனைவி ஆகியோர் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.