உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

ராமநவமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

லாலாபேட்டை: கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு அபி ?ஷகத்தில் பலர் பங்கேற்றனர். இந்த சிறப்பு அபிஷேகத்தின் போது, சந்தனம், மஞ்சள், பால், தயிர், திரவியப் பொடிகள் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் நடந்தன. இதேபோல், வேலாயுதம்பாளையம் டி.என்.பி.எல்., குடியிருப்பில் உள்ள வல்லபை கணபதி கோவிலில் குடி கொண்டிருக்கும் ராமருக்கும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !