கோட்டை கோவிலில் 4ம் நாள் ராமநவமி விழா
ADDED :3502 days ago
சேலம்: ராமநவமி விழா கடந்த, 15ம் தேதி சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் சிறப்பாக துவங்கியது. 25ம் தேதி வரை ராமநவமி கொண்டாடப்படுகிறது. நான்காவது நாளான நேற்று அழகிரிநாத சுவாமி, திருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சியளித்தார். சுந்தரவள்ளி தாயார், பத்மாவதியாக காட்சியளித்தார். அதிகாலை சுப்ரபாதம், தேவாரம் பாடப்பட்டது. தொடர்ந்து உச்சிக்கால பூஜை, ராக்கால பூஜை நடந்தது. திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதிபோல், அழகிரிநாதர் காட்சியளித்ததால் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.