ஷீரடி சாய்நாதர் கோவிலில் துனி அடிக்கல் நாட்டு விழா!
ADDED :3502 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் உள்ள ஷீரடி சாய்நாதர் கோவிலில், துனி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. செல்வபுரத்தில் ஷீரடி சாய்நாதர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு சாய்பாபா பிறந்த நாளையொட்டி பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற பயன்படும் துனி அமைக்க, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கட்டுமான பணியை பக்தர்கள் செங்கல் எடுத்து கொடுத்து துவக்கி வைத்தனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், ஆரத்தி நிகழ்ச்சிகளும் நடந்தன. கட்டுமான பணிக்கு தேவையான பொருட்கள் நன்கொடையாக பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சாய்செந்தில்குமார் செய்திருந்தார்.