உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேரலெட்சுமி அலங்கரத்தில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பு!

குபேரலெட்சுமி அலங்கரத்தில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பு!

காரைக்கால்: காரைக்கால் கடைதெரு மகா மாரியம்மன் கோவிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு குபேரலெட்சுமி அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காரைக்கால் கடைதெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவக்கியது.திருவிழா தொடங்கப்பட்டு 4ம் நாளாக திருவிளக்கு பூஜையில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.பின் தினம் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.நேற்று முன்தினம் அம்மானுக்க காலை அபிஷேகம் அன்னதானம் மற்றும் மாலை குபேரலெட்சுமி அலங்காரம் தீபாராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !