தஞ்சாவூர் ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்!
ADDED :3502 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம், 12ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடந்தது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து, பஞ்ச மூர்த்திகளுடன், திருவையாறின் நான்கு வீதிகளிலும் வலம் வந்தார்.