உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

சூலுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

சூலுார்: சூலுார் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, நேற்று நடந்தது. சூலுார் பெரிய மாரியம்மன் கோவில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, 5ம்தேதி இரவு, 10:00 மணிக்கு சாமி சாட்டுதல் பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது. 12ம்தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று முன்தினம் பண்டார வேஷம், அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் திருவீதியுலா நடந்தது. முன்னதாக பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால் குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இன்று அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மகா முனி பூஜையுடன் வரும், 26ம்தேதி விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !