படைவெட்டி மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா!
ADDED :3502 days ago
காரைக்கால்: திருப்பட்டினத்தில் படைவெட்டி மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. காரைக்கால் திருப்பட்டினம் வடகட்டளைத் தெருவில் உள்ள படைவெட்டி மகா மாரியம்மன் கோவிலில் வருடாந்திர சித்திரைத் திருவிழா, கடந்த 13ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவக்கியது. 14ம் தேதி காவடி ஊர்வலம், அபிஷேக ஆராதனை, கஞ்சி வார்த்தல் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம், அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் அபிஷேக ஆராதனை, அம்பாள் திரு வீதியுலா நடந்தது. வீரன், பெரியாச்சி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.