ரங்கநாதர் கோவில்களில் இன்று தேர்த்திருவிழா
பெ.நா.பாளையம்: பாலமலை ரங்கநாதர், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில்களில் இன்று சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா நடக்கிறது. இவ்விரு கோவில்களிலும் விழாவையொட்டி, ரங்கநாதசுவாமி அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பாலமலையில் இன்று மாலை, 3:00 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவிலில் இன்று காலை, 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் தொடங்குகிறது. இவ்விரு கோவில்களிலும் தொடர்ந்து பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், சேஷ வாகன உற்சவம், தெற்போற்சவம், சந்தான சேவை சாற்றுமுறை தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.