உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் வர உகந்த நேரத்தை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமியின் போது, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று, 21ம் தேதி காலை, 9.10 மணிக்கு துவங்கி, நாளை, 22ம் தேதி காலை, 11.10 வரை பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக, வழிநெடுகிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக, தேங்காய் நார்களால் ஆன தரைவிரிப்பு பாய் மற்றும் முக்கிய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !