உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழா இன்று அழகர் எதிர்சேவை!

மதுரை சித்திரை திருவிழா இன்று அழகர் எதிர்சேவை!

இன்று அழகர்கோவில் கள்ளழகர் எதிர்சேவை வைபவம் நடக்கிறது. துர்வாசரின் சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷி, மீண்டும் சுயரூபம் வேண்டி வைகையாற்றின் கரையோரத்தில் இருந்த தேனுார் வனத்தில் பெருமாளை எண்ணி தவம் செய்தார். அவருக்கு அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கருடவாகனத்தில் தோன்றி மோட்சம் அளித்தார். இந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமியன்று நிகழ்ந்தது. இதனடிப்படையில் பெருமாள் அழகர்கோவிலில் இருந்துபுறப்பட்டு மதுரை வருகிறார். அவரை வரும் வழியெல்லாம் வரவேற்கும் வைபவத்தைேய எதிர்சேவை என்கிறார்கள். அழகருக்கு சர்க்கரை நிரப்பிய கிண்ணத்தில் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு வணங்குவார்கள். 16ம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்தார். அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தார். வண்ணமயமான எதிர்சேவை நாளான இன்று, அழகரை வரவேற்க செல்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !