சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் துவக்கம்
சின்னமனுார்: சிவ, சிவ கோஷம் முழங்க சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் துவங்கியது. செக்கா முக்கிலிருந்து தேர் நாளை நிலைக்கு கொண்டு வரப்படும். செப்பேடு புகழ் சின்னமனுõர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு சமுதாய மக்கள் சார்பில், சுவாமி அழைப்பு மண்டகப்படி நடந்தது. நேற்றுமுன்தினம் சிவகாமியம்மன் - பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மணகோலத்தில் சுவாமி பிரியாவிடையுடன் ரதவீதிகளில் உலா வந்தார்.
தேரோட்டம்: நேற்று கோயிலில் இருந்து சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர், பிரியாவிடை, வள்ளி சமேத சண்முகர் ஊர்வலமாக தேருக்கு அழைத்து வரப்பட்டனர். சிவ, சிவ கோஷம் முழங்க பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். செக்காமுக்கில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று செக்காமுக்கிலிருந்து கண்ணாடிகடை முக்கு வழியாக நிலைக்கு தேர் சென்றடையும். தக்கார் பாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர். சின்னமனுõர் நகராட்சி தலைவர் சுரேஷ், காயத்ரி மெட்ரிக்., பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் பால்பாண்டி, துர்கா ஹெர்பல் இயக்குநர் வஜ்ரவேல், ஆனந்தம் பர்னிச்சர் உரிமையாளர் மாரிச்சாமி, டி.டபிள்யூ.சி. டிரஸ்ட் இயக்குநர் பரமேஸ்வரி, ராமவிலாஸ் நிறுவனத்தினர், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், ஜெயகிருஷ்ணா நகை மாளிகை உரிமையாளர் வெங்கடேசன், முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் மயில்வாகனன், கலைமகள் ஏஜென்ஸி காமராஜ், தனலட்சுமி ஜூவல்லர்ஸ் சந்திரசேகர், கே.ஜி.நகைமாளிகை ராஜா செல்வக்குமார், சூர்யா ஏஜென்சீஸ் அழகுவேல், பா.ஜ., நகர தலைவர் பரமசிவம், பாஸ்கர் ஜூவல்லர்ஸ் பாஸ்கரன், சபரி மோட்டார்ஸ் முருகராஜா, ஜெயசக்தி ஸ்டோர் பழனிச்சாமி, லட்சுமி ஆபரண மாளிகை நடராஜன், சாரதாம்பாள் ஜூவல்லர்ஸ் மணிகண்டவேல், கோகுலன், விக்னேஷ் கல்வி ஆலோசனை மைய சந்தனமுத்தையா, ஆப்பிள் மென்ஸ்வேர் பாண்டி, ரத்னா கேஸ் ஏஜென்ஸி ஈஸ்வரதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.