உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பவுர்ணமி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பவுர்ணமி விழா துவக்கம்

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்திரைப் பவுர்ணமி விழா, கோலாகலமாக நேற்று துவங்கியது. நேற்று காலை, 3:30 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார்.காலை, 9:15 மணிக்கு, பங்காரு அடிகளார் சித்தர் பீடம் வந்த போது, பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இன்று காலை, 10 :00 மணிக்கு, சிறப்பு கலசவிளக்கு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !