எரிச்சனாம்பாளையம் கோவிலில் தீமிதி விழா
ADDED :3503 days ago
விழுப்புரம்: எரிச்சனாம்பாளையம் கோவிலில் நாளை தீமிதி விழா நடக்கிறது. விழுப்புரம் அடுத்த எரிச்சனாம்பாளையம் மன்னார்சாமி பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. இன்று அக்னி கரகம், பூங்கரம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை (22ம் தேதி) பகல் 12:00 மணிக்கு முருகன் சமேத வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம், பிற்பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மாலை 5:30 மணியளவில் தீமிதி விழாவும் நடக்கிறது.