பழநி ரெணகாளியம்மன் திருவிழா
ADDED :3503 days ago
பழநி: பழநி ரெணகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழநி புதுதாராபுரம்ரோடு போலீஸ் குடியிருப்பு அருகேயுள்ள ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. ஏப்.,19ல் காணியாளர் செல்வராஜ் கவுண்டர் இல்லத்திலிருந்து பொன் ஆபரணப்பெட்டி எடுத்து வருதல், புனித கிணற்று நீரில் அம்மனுக்கு அபிஷேக ஆதாரனை செய்து சக்திகரகம் ஊர்வலமாக வந்தது. மூலவர் ரெணகாளியம்மனுக்கு தங்கக்கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் செய்தனர். வெள்ளிச் சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வேலன் யமஹா மோட்டார்ஸ், வேலன் டயர்ஸ் உரிமையாளர்கள் வினோத்குமார், விவேக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.