உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் கூத்தாண்டவர் கோவில் தேர்த் திருவிழா

வில்லியனுார் கூத்தாண்டவர் கோவில் தேர்த் திருவிழா

வில்லியனுார்: புதுச்சேரி, பிள்ளையார்குப்பம், கூத்தாண்டவர் கோவில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, கூத்தாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து, திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. நள்ளிரவு 1:00 மணிக்குமேல், சுவாமி வீதியுலா நடந்தது. கூத்தாண்டவர் தேர்த் திருவிழா நேற்று காலை நடந்தது. மாலையில், அழுகள நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !