பரமக்குடியில் இன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார்
ADDED :3503 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நள்ளரவு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார்.இங்கு சித்திரை திருவிழா ஏப்., 17ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. இன்று காலை 7.35 மணிக்கு கும்பத்திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 2 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், வாணவேடிக்கை முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். நாளை தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.மறுநாள் தசாவதாரம் நடக்கிறது. விழாவையொட்டி கோயில் மற்றும் வைகை ஆறு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.