வீரபாண்டி கோயில் திருவிழா கொடியேற்றம்
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே10ம்தேதி துவங்கி 17ல் நிறைவு பெறுகிறது.இதையொட்டி நேற்று கண்ணீஸ்வர முடையார் கோயில் ஆற்றங்கரையில் இருந்து கம்பம் கொண்டு வந்து கோயிலில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கரகம், மஞ்சள் தீர்த்தம் எடுத்து வந்து கொடி கம்பத்திற்கு ஊற்றினர். அம்மன் தினமும் வீதி உலா, மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 22வது நாளில் சித்திரை திருவிழா துவங்கி 7 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் அம்மன் பவனி வருதல், முத்துப்பல்லக்கில் புறப்பாடு, புஷ்ப பல்லக்கு, தேர் வடம் பிடித்தல், தேர் நிலைக்கு திரும்புதல், ஊர் பொங்கல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் செய்தார்.