பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
க.பரமத்தி: புன்னம் பஞ்சாயத்திற்குட்பட்ட புன்னம் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும், 26ம் தேதி நடக்கிறது. க.பரமத்தி யூனியன் புன்னத்தில், பெரிய மாரியம்மன் கோவிலில், காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி, கடந்த, 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து, புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று படிபூஜை, 23ம் தேதி வரை நடக்கிறது. வரும், 25ம் தேதி, கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் பக்தர்களால் எடுத்து வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து, 26ம் தேதி, அபிஷேகம், மாவிளக்கு, கிடாவெட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும், 26ம் தேதி நடக்கிறது. விழாவினைபுன்னம், பசுபதிபாளையம், குளத்தூர், அய்யனூர், பழமாபுரம், ஆலாம்பாளையம், பெரியரங்கபாளையம், வேலாயுதம்பாளையம், தலையீத்துப்பட்டி உள்ளிட்ட, 18 குக்கிராம மக்கள் செய்துள்ளனர்.