உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் தலவரலாறு!

அழகர்கோவில் கள்ளழகர் தலவரலாறு!

தர்மதேவதையான எமன் பூலோகத்தில் விருஷபாத்ரி என்னும் மலையில் விஷ்ணுவை நோக்கி தவம் செய்தான். அதைக் கண்டு மனம் இரங்கிய விஷ்ணு, சுந்தரராஜராகப்பேரழகுடன் காட்சியளித்தார். தான் பெற்ற பாக்கியத்தை அனைவரும் பெற வேண்டும் என்று எமன் வேண்டிக் கொள்ளசுவாமியும் அங்கேயே எழுந்தருளினார். அழகர்மலை என்னும் அத்தலத்தில் தேவசிற்பியான விஸ்வகர்மா உதவியுடன் கோவில்கட்டினான். இங்கு சோமசந்த விமானத்தின் கீழ் பெருமாள்பரமஸ்வாமி என்றதிருநாமத்துடன், கையில் சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் என்னும் ஆயுதங்களைத்தாங்கி கிழக்கு நோக்கி இருக்கிறார்.உற்சவர் பெயர் சுந்தரராஜர் அல்லதுகள்ளழகர். இவர்பெயரிலேயே கோவில் அழைக்கப்படுகிறது. அபரஞ்சி தங்கத்தால் ஆன இவருக்கு மலையிலுள்ள நுாபுர கங்கை தீர்த்தத்தால்அபிஷேகம் செய்வர்.இங்கு சுந்தரவல்லித்தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியஆறு ஆழ்வார்கள்123 பாசுரங்களை இங்கு பாடியுள்ளனர்.வராக புராணம்,பிரம்மாண்ட புராணம், ஆக்னேய புராணம்ஆகியவற்றில் இதன்வரலாறு இடம்பெற்றுள்ளது.

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி!

கருப்பணசுவாமிக்கெல்லாம் தலைமைத் தெய்வமாகவிளங்குபவர் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி.கிருஷ்ணபுத்திரன் எனப்படும் இவருக்கு உருவம் கிடையாது. கோபுரக் கதவுகளே தெய்வமாக இங்கு வழிபடப்படுகிறது. சந்தனத்தால் கதவை அலங்காரம் செய்து நிலைமாலை சாத்துகின்றனர்.நீதி தெய்வமான இவருக்கு பொங்கல் படைத்து வழிபடுவது சிறப்பு. வேண்டுதல் நிறைவேறியதும் கத்தி, அரிவாள், ஈட்டி, செருப்பு ஆகியவற்றை காணிக்கையாகப் பக்தர்கள் செலுத்துகின்றனர். கிராம மக்கள் தங்களின் குடும்பங்களில்ஏற்படும் வம்பு, வழக்குகளை இவர் முன்னிலையில் பேசி தீர்த்துக் கொள்வது இன்றும் வழக்கமாக உள்ளது. தினமும் கள்ளழகரின் அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தும் நுாபுர கங்கைத்தீர்த்தம் இவர் முன்னிலையில்வைக்கப்பட்ட பின்னரேகோவிலுக்குள் எடுத்துச்செல்லப்படும்.

அழகர் போற்றி

ஓம் அழகர்மலையானே போற்றி
ஓம் அநாத ரட்சகா போற்றி
ஓம் ஆபத்பாந்தவா போற்றி
ஓம் ஹரிஹரி போற்றி
ஓம் ஸ்ரீஹரி போற்றி
ஓம் நரஹரி போற்றி
ஓம் முரஹரி போற்றி
ஓம் கிருஷ்ணாஹரி போற்றி
ஓம் அம்புஜாட்சா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரரேறே போற்றி
ஓம் பஞ்சாயுதா போற்றி
ஓம் பாண்டவர் துாதா போற்றி
ஓம் லட்சுமி நாராயணா போற்றி
ஓம் லீலா விநோதா போற்றி
ஓம் கமல பாதா போற்றி
ஓம் பரமானந்தா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் வைகுந்தா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் பச்சை வண்ணா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் பன்னக சயனா போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் ஜனார்த்தனா போற்றி
ஓம் கருட வாகனா போற்றி
ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் சேஷ சயனா போற்றி
ஓம் நாராயணமூர்த்தியே போற்றி
ஓம் பிரம்ம பாராயணா போற்றி
ஓம் வாமன மூர்த்தியே போற்றி
ஓம் நந்தகோபன் குமரா போற்றி
ஓம் யசோதை செய்தவமே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்டூகர் வாழ்வே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் சர்வகாரணனே போற்றி
ஓம் வெங்கட ரமணனே போற்றி
ஓம் சங்கட ஹரணா போற்றி
ஓம் ஸ்ரீதரனே போற்றி
ஓம் துளசி தரா போற்றி
ஓம் தாமோதரனே போற்றி
ஓம் பீதாம்பர தாரியே போற்றி
ஓம் பலபத்ரா போற்றி
ஓம் பக்த வத்சலா போற்றி
ஓம் சீதா மனோகரா போற்றி
ஓம் தசாவதாரா போற்றி
ஓம் மச்சாவதாரா போற்றி
ஓம் கூர்மாவதாரா போற்றி
ஓம் வராக மூர்த்தியே போற்றி
ஓம் சங்கு சக்கரதாரியே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் ராதா மனோகரா போற்றி
ஓம் ஸ்ரீரங்க நாதரே போற்றி
ஓம் ஹரி கிருஷ்ணா போற்றி
ஓம் பாண்டு ரங்கா போற்றி
ஓம் லோகநாயகா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் புருஷோத்தமா போற்றி
ஓம் புண்ணிய புருஷா போற்றி
ஓம் திவ்ய சொரூபா போற்றி
ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் சிங்கப்பிரானே போற்றி
ஓம் திரிவிக்ரமனே போற்றி
ஓம் பரசுராமனே போற்றி
ஓம் சகஸ்ரநாமனே போற்றி
ஓம் பக்தர் திலகமே போற்றி
ஓம் தேவானுகூலா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஸ்ரீலோலா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் யாதவா போற்றி
ஓம் ராகவா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் வாசுதேவா போற்றி
ஓம் தேவதேவா போற்றி
ஓம் ஆதிதேவா போற்றி
ஓம் மகானுபாவா போற்றி
ஓம் வசுதேவ தனயா போற்றி
ஓம் தசரத தனயா போற்றி
ஓம் மாயா விலாசா போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் வேங்கடேசா போற்றி
ஓம் ஹ்ருஷிகேசா போற்றி
ஓம் சித்தி விலாசா போற்றி
ஓம் கள்ளழகனே போற்றி
ஓம் சுந்தரராஜனே போற்றி
ஓம் சீதாபதியே போற்றி
ஓம் லட்சுமிபதியே போற்றி
ஓம் வெங்கடாசலபதியே போற்றி
ஓம் வெண்ணெய் உண்டவாயா போற்றி
ஓம் அண்டர் போற்றும் துாயா போற்றி
ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
ஓம் சதுர்புஜா போற்றி
ஓம் கருடத்வஜா போற்றி
ஓம் கோதண்ட ஹஸ்தா போற்றி
ஓம் விஷ்ணு மூர்த்தியே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி
ஓம் வையாழி கண்டருள்வாய் போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி போற்றி!

தினமும்அபிஷேகம்: அழகர் கோவிலின்மேற்கு பிரகாரத்தில்யோக நரசிம்மர் சன்னிதி உள்ளது. உக்ர மூர்த்தியாக கோபத்துடன் இருக்கும் இவரை ஜூவாலா நரசிம்மர் என்பர். இவர் தலையில் இருந்து கோபத்தீ வெளியேறமேல் துவாரம் ஒன்றுஉள்ளது. இவரைத் தணிக்க எண்ணெய், பால், தயிர், நுாபுர கங்கை தீர்த்தத்தால்அபிஷேகம் செய்வர்.பச்சையப்ப முதலியார்ஏற்படுத்திய அபிஷேககட்டளை பதினெட்டாம்படி கோபுர வாசலில்கல்வெட்டாக உள்ளது. வடக்குப் பிரகாரத்திலும் யோக நரசிம்மர் சன்னிதிஇருக்கிறது.

குலதெய்வம் கள்ளழகர்: 
வைகையாற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்திஇறங்கினால் நாடு வளம் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுரையைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு இவரே குலதெய்வமாகவிளங்குகிறார்.வேண்டுதல் நிறைவேறியவர்கள், சித்ராபவுர்ணமியன்று அழகருக்கு நேர்த்திக்கடனாக முடிக் காணிக்கை செலுத்துவர். அழகர்கோவிலில் எடைக்கு எடை நாணயம், தானியம் என துலாபாரம் செலுத்துவது சிறப்பு. விவசாயிகள் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை காணிக்கையாகசெலுத்துவதும் உண்டு.

பயோ - டேட்டா

மூலவர் : பரமஸ்வாமி.
உற்சவர் : சுந்தரராஜப் பெருமாள்
தாயார் : கல்யாண சுந்தரவல்லி.
தல விருட்சம் : ஜோதி விருட்சம்,
சந்தனமரம்.
தீர்த்தம் : நுாபுர கங்கை
பாடியவர்கள் : பெரியாழ்வார்,
ஆண்டாள்,
பேயாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
நம்மாழ்வார்.

வணக்கப்பாடல்

சிந்துாரச் செம்பொடி போல்
திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று
மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான்
சுழலையினின்று உய்துங் கொலோ.

100 அண்டா பிரசாதம்

ராமானுஜர் கள்ளழகருக்குப் படைத்த அக்கார அடிசில் நைவேத்யம், ஆண்டில் ஒருமுறை பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது. ஆண்டாள் திருப்பாவையின் 27ம் பாசுரத்தில் அக்கார அடிசில் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் மார்கழி மாதத்தின் 27வது நாளில் பெருமாளுக்கு அக்கார அடிசில் நைவேத்யமாக படைக்கின்றனர். இது தயாரிக்கும் விதத்தைக் கேட்டாலே நாவில் நீர் ஊறும். இதை தயாரிக்கும் முறை இது தான்! 80 லிட்டர் பாலில் 10 கிலோ நெய் சேர்ப்பர். இந்த கலவையில் 5 கிலோமுந்திரி பருப்பு, 5 கிலோ பாதாம் பருப்பு,5 கிலோ பிஸ்தா, 5 கிலோ வெள்ளரி விதை, பச்சரிசி 1 படி, 30 கிலோ கல்கண்டு,குங்குமப்பூ 25 கிராம் சேர்த்து 8 மணிநேரம் சரியான பதத்தில் காய்ச்சினால் இந்த சுவையான பிரசாதம் கிடைக்கும். ஒரு அண்டா பிரசாதம் தயாரிக்கும் அளவு தான் இது. ராமானுஜர் 100 அண்டா பிரசாதம் தயாரித்து படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒரு அண்டாவில் தயாரிப்பதை 100 பாத்திரங்களில் பிரித்து வைத்து படைக்கின்றனர்.

ஐப்பசியில் நீராடுங்க!

அழகர்கோவிலுக்குரிய தீர்த்தம் நுாபுரகங்கை.சிலம்பாறு என்னும் இத்தீர்த்தம் திருமாலின் பாத சிலம்பில் இருந்து வருவதாக தல வரலாறு கூறுகிறது. திரிவிக்ரம அவதாரம் எடுத்த திருமால், பூலோகத்தை அளக்க திருவடியைத் துõக்கினார். அது பிரம்மாவின் சத்தியலோகத்தை எட்டியது. அதைக் கண்ட பிரம்மா தன் கமண்டல நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். திருமாலின் கால் சிலம்பில் பட்ட நீர் பூலோகத்தை அடைந்தது. அதுவே அழகர்மலையில் நுாபுர கங்கையாக மாறியது. ஐப்பசி வளர்பிறை துவாதசி நாளில் இதில் நீராடினால் விஷ்ணு அருளால் நல்வாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம்.

அழகர்கோவிலில் நான்கு தாயார்

பங்குனி உத்திரநாளில் அழகர்கோவில்பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அன்று காலையில் அழகர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி ஆகிய நான்கு தாயார்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில்எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு நான்கு தாயார்களுடன் திருமண வைபவம் நடந்தேறும். அதன் பின் சுவாமி, தாயார்களுடன் பூப்பல்லக்கில் மூலஸ்தானத்திற்கு திரும்புவார். அன்று ஒருநாள் மட்டுமே பெருமாளை நான்கு தாயார்களுடன் ஒன்றாக தரிசிக்க முடியும்.

மாதவி மண்டபம்: நுாபுர கங்கை தீர்த்தக்கரையில் உள்ள பெண் காவல் தெய்வம் ராக்காயி.ஆங்கிரச முனிவரின் மகளாகக் கருதப்படும்இவளை அமாவாசையன்று வழிபடுவது நன்மையளிக்கும். இத்தீர்த்தத்தில் அமாவாசையில் நீராடி, ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும் என்பர்.மல்லிகை கொடிகள் சூழ்ந்திருந்ததால் ராக்காயி அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்திற்குமாதவி மண்டபம் என்ற பெயர் வழங்கியதாகச் சொல்வர். அழகர் கோயில்தலபுராணத்தில் இதன் பெருமைகூறப்பட்டுள்ளது.

இன்று அழகர் எதிர்சேவை: இன்று அழகர்கோவில் கள்ளழகருக்கு எதிர்சேவை வைபவம் நடக்கிறது. துர்வாசரின் சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷி, மீண்டும் சுயரூபம் வேண்டி வைகையாற்றின் கரையோரத்தில் இருந்த தேனுார் வனத்தில் பெருமாளை எண்ணி தவம் மேற்கொண்டார். அவருக்கு அருள்புரிவதற்காக அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி மோட்சம் அளித்தார்.இந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமிஅன்று நிகழ்ந்தது. இதனடிப்படையில் பெருமாள் அழகர்கோவிலில்இருந்து புறப்பட்டு வைகையாற்றுக்கு எழுந்தருள்கிறார். 16ம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்தார். அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றிஅமைத்தார். மீனாட்சியம்மன் கோவிலில்அக்காலத்தில் மாசித் திருவிழா தான் நடந்தது, அதை சித்திரை மாதத்துக்கு மாற்றிய நாயக்கர், அழகர் திருவிழாவையும் அதே மாதத்தில் நடத்தினார். இதனால் தான் மீனாட்சி தேரோட்ட திருநாள் முடிந்த மறுநாளே பெருமாளின் எதிர்சேவை திருவிழா துவங்கியது. மேலும், கோடையில் விவசாயப் பணிகள் குறைவு. மக்கள் விழாவைப் பார்க்க இது வசதியாக அமைந்தது. எதிர்சேவை திருநாளன்றுஅழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி வரும் அழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்பர். இதற்காக மதுரை வரும் வழியெல்லாம் திருக்கண்
மண்டபங்கள் கட்டப்பட்டன. அங்கு அழகருக்கு சர்க்கரை நிரப்பியகிண்ணத்தில் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு வணங்கினர். வண்ணமயமான எதிர்சேவை நாளான இன்று, அழகரைவரவேற்க நாமும் செல்வோமே.

கோவிந்தா... கோவிந்தா

கோவிந்தா என்ற கோஷம் அழகர் வரும் பாதையெங்கும் கேட்கும். கோவிந்தா என்றால் திரும்ப வராதது என்று பொருள்படும். ஆம்...அழகர் தரிசனம் பாவத்தைப் போக்கும். அந்த பாவத்தின் பலன் திரும்ப நம்மை அண்டாது. கோ என்றால் தலைவன். விந்தம் என்றால் திருவடி. அவன் பாதார விந்தங்களைத் தரிசித்தால் பாவம் முற்றிலும் நீங்கி விடும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு அழகரைப் பக்திப்பூர்வமாகத் தரிசிக்கிறார்கள்.

யாகம் செய்த புண்ணியம்

வால்மீகியின் ராமாயணம், வியாசரின் மகாபாரதம், சுகரின் பாகவதம் ஆகிய நுால்களிலும் அழகர் மலையின் பெருமை கூறப்பட்டுள்ளது. சித்ரகூட மலையில் ராமர், லட்சுமணர், சீதை தங்கியிருந்த பகுதி அழகர்மலையைஒத்திருந்ததாக வால்மீகியின் குறிப்பு உள்ளது.பாண்டவர்களில் தர்மர் அழகர்மலைக்கு தீர்த்தயாத்திரை வந்ததாக வியாசர் கூறியுள்ளார். பலராமர் பாண்டிய தேசத்தில் உள்ள விருஷபாத்ரி(அழகர்மலை) மலையை தரிசித்து விட்டு சேதுக்கரைக்குப் புறப்பட்டதாக பாகவதம் கூறுகிறது.இந்த மலையைத் தரிசித்தவர்கள் வாஜபேய யாகம் செய்த புண்ணியத்தை அடைவதாக நாரதர் பீஷ்மருக்கு உபதேசித்ததாக மகாபாரதம் கூறுகிறது.

பழமைமிக்க அழகர்மலை

அழகர் வீற்றிருக்கும் மலை என்பதால் அழகர்மலை என்று சொன்னாலும் தலவரலாற்றில் வேறு பெயர்களும் உள்ளன.திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை,மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி,இடபகிரி என்பனவாகும். நாலாபுறமும் மலை பரவிக் கிடந்தாலும் பெருமாள் மலையின் தெற்கில் கோவில் கொண்டிருக்கிறார். இத்தலம் மிகவும் பழமை மிக்கதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் சிறப்பு மிக்கது. வராக புராணம், பிரம்மாண்ட புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் ஆகியவற்றில் இதன் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இவற்றை தொகுத்து விருஷபாத்ரி மகாத்மியம் என்றும் ஸ்தல புராணம் வடமொழியில் இயற்றப்பட்டுள்ளது.

பெருமாளுக்கு தோசை

சாதாரணமாக கோவில்களில் சுவாமிக்கு நைவேத்யத்தில் சர்க்கரைப்பொங்கல், கொண்டைக்கடலை,  வெண்பொங்கல்ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஆனால், தோசையை நைவேத்யமாக படைக்கும் பழக்கம்அழகர்கோவிலில்இருக்கிறது.இதற்காக கிராமத்துமக்களே அதிகமாகவருகிறார்கள். அவர்கள்தங்களின் வயலில் விளையும் தானியங்களையே சுவாமிக்கு காணிக்கையாகச்செலுத்துகின்றனர்.இந்த தானியங்களை அரைத்து மாவாக்கி தோசை தயாரிக்கப்பட்டுபெருமாளுக்கு படைக்கப்படுகிறது. இந்த தோசை தயாராகும் விதம் சுவாரஸ்யமானது. மடப்பள்ளியில் இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி தோசைக்கல் இருக்கிறது. ஊற வைத்து இடித்த அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்புஆகியவை சேர்த்துமாவாக்குகின்றனர். அதில் நெய் விட்டு பெரிய தோசையாக வார்க்கின்றனர். மாலை நேர பூஜையில் இந்த தோசையுடன் கொண்டைக்கடலை, வடை, சர்க்கரை ஆகியவையும் சுவாமிக்குப் படைக்கப்படுகிறது. தாயார் கல்யாண சுந்தரவல்லிக்கு வெள்ளிக்கிழமையில் மட்டும் தோசை நைவேத்யம் உண்டு.

கல்விதெய்வங்கள்

ஹயக்ரீவரும்சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்களாவர். இவர்கள் இருவரும் அழகர்கோவிலில் காட்சி தருகின்றனர்.கல்வி தெய்வங்களான இவர்களை வணங்கினால் கல்வி வளர்ச்சி, ஞானம் உண்டாகும். ஒரே தலத்தில் இந்த இருவரையும்தரிசிப்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !