உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் கதகளி நடன நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் கதகளி நடன நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராதம் கதகளி நடன நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புரத்தில் உள்ள  ஸ்ரீ ஜய்யப்பன்  கோவிலில், 25ம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு பிரதிஷ்ட தின பூஜைகள் கடந்த 18ந் தேதி தொடங்கியது,தொடர்ந்து மஹா கணபதி ஹோமம்,அஷ்ட திரவிய அபிஷேகம்,களப அபிஷேகம்,புஷ்ப அலங்காரம் சுற்று விளக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன,இதனை தொடர்ந்து கேரள மாநிலம் கலா மண்டபம் குழுவினரின் கிராதம் என்ற கதகளி நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது,கேரளாவின் பிரசித்தி பெற்ற இந்த நாட்டியம் மகாபார கதையில் சிவபெருமானை நோக்கி அஸ்த்திரம் பெற காட்டிற்கு தவமிருக்க செல்லும் அர்ஜுனன் தன்னை வெள்ள யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் இருந்ததை உணர்ந்த சிவபெருமான் அதற்கு தக்க பாடம் புகட்டும் வகையில், காட்டு மனிதனாக வந்து அர்ஜுனனுடன் சண்டையிட்டு தோற்கடித்து அவரது ஆணவத்தை போக்கி, பார்வதி தேவியுடன் காட்சி அளித்து யாரும் ஆணவத்துடன் இருந்தால் இலக்கை அடைய முடியாது என்பதை உணர்த்துவதே இந்த கதையின் முக்கிய நோக்கம், இதனை நாட்டிய கலைஞர்கள் தத்துரூபமாக நடித்து காட்டியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !