உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனக் குழப்பங்கள் தீர்க்கும் உக்ர நரசிம்மர்!

மனக் குழப்பங்கள் தீர்க்கும் உக்ர நரசிம்மர்!

நரசிம்மர் உக்ரமாக - இரண்யகசிபுவை வதம் செய்யும் கோலத்தில் அருளும் தலங்கள் அபூர்வம். கூடலூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இப்படியான நரசிம்மரைத் தரிசிக்கலாம். சாளரம் போன்ற சதுர வடிவக் கல்லை பின்னணியாகக் கொண்டு காட்சி தருகிறார் இவர். சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ தினத்தன்று இவரை வழிபடுவது சிறப்பான பலன் தரும். முக்கியமாக கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற, மனக் குழப்பம் தீர, எதிரிகள் குறித்த பயம் நீங்க வேண்டி, இவருக்கு தயிர் சாதம் பானகம் அல்லது காய்ச்சிய பாலை நைவேத்தியம் செய்து பிரார்த்திக்கிறார்கள். 48 நாட்கள் விரதமிருந்து வழிபடுவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !