உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லது வளர்க்கும் வசீகர பைரவர்!

நல்லது வளர்க்கும் வசீகர பைரவர்!

கூடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், ஊர் எல்லையில் வயல் வெளிகளுக்கு மத்தியில், கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் அருள்கிறார் இந்த பைரவர். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம். பத்து திருக்கரங்கள், தலையில் அக்னி கீரிடம் இடுப்பில் நாகாபரணம் எனத் திகழும் இந்த பைரவருக்கு, வசீகர மூர்த்தி என்ற நாமகரணமும் உண்டு. தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபட்டால், தீமைகள் தேய்ந்து போகும் வளர்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நல்லது வளரும். என்பது ஐதீகம். இந்த நாட்களில் இவரை வந்து வழிபட்டால் மனக்குழப்பங்கள், பிரச்னைகள், காரியத்தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள். அதேபோல், காரமான சாத வகைகளை நைவேத்தியம் செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லைகள் நீங்குமாம். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில், இந்தக் கோயிலுக்கு வந்து இவரை வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !