உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளம் பொங்க அருள் செய்யும் பொங்கு சனீஸ்வரர்!

வளம் பொங்க அருள் செய்யும் பொங்கு சனீஸ்வரர்!

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சீலையசாமி சிவன் கோயில். இந்தக் கோயிலில் பொங்கு சனிபகவானைத் தரிசிக்கலாம். நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் தனிச் சன்னிதியில் காட்சியளிக்கும் இந்த சனீஸ்வரருக்கு எதிரில் அவரை வணங்கியபடி நள -தமயந்தி தம்பதியினர் காட்சி தருகின்றனர். சனிக்கிழமைகள் அல்லது அவரவர் நட்சத்திர நாட்களில் இந்த கோயிலுக்கு வந்து, இவருக்கு எள் தீபம் ஏற்றி, கறுப்பு நிற ஆடை சமர்ப்பித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதனால் வாழ்வில் நன்மைகள் பொங்கும், வளம் பெருகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !