சித்ரா பவுர்ணமி: பழநியில் வெள்ளித் தேரோட்டம்!
பழநி:சித்ரா பவுர்ணமியையொட்டி பழநியில் அரோகரா சரண கோஷத்துடன் வெள்ளித் தேரோட்டம் நடந்தது. பெரியநாயகியம்மன் கேயில் சித்ரா பவுர்ணர்மி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில், பெரியநாயகியம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். நேற்று காலை 6 மணிக்கு மேல் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பாக பெரிய நாயகியம்மன் கோயிலிருந்து 108 பால் குடங்கள் புறப்பட்டு, திருஆவினன்குடி கோயிலை அடைந்தது. குழந்தை வேலாயுத சுவாமிக்கு பால்குட அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடந்தது.
வெள்ளித்தேர்: சித்ராபவுர்ணமியை முன்னிட்டு, முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு மேல் சுவாமி தேர் ஏற்றம் செய்யப்பட்டு, இரவு 9 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலிருந்து வெள்ளித் தேரோட்டம் ஆரம்பம் ஆனது. முன்னதாக தேர் முன், பக்தர்கள் விடலை தேங்காய்களை உடைத்தனர். 4 ரத வீதிகளில் தேர் வடம் பிடித்தல் நடந்தது. தேரோட் டத்தில், பழநி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா விழா ஏற்பாடு செய்தனர்.