திரிவேணீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3503 days ago
புதுச்சேரி: வி.மணவெளி திரிவேணி நகரில் உள்ள திரிபுர சுந்தரி வலம் உறை திரிவேணீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வி.மணவெளி திரிவேணி நகரில் உள்ள திரிபுர சுந்தரி வலம் உறை திரிவேணீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 7.20 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. 9 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.