பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா!
ADDED :3503 days ago
விக்கிரவாண்டி: பனையபுரம் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழமையான, பனங்காட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை பெருவிழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. பெருவிழாவின், 10ம் நாளன்று, தேர்த் திருவிழா நடந்தது. காலை 9:20 மணிக்கு, பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் தேர் புறப்பாடு நடந்தது. முன்னதாக, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், பனங்காட்டீஸ்வரர், சத்தியாம்பிகை, நேத்ரோநாரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.