உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவநாத சுவாமி கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

தேவநாத சுவாமி கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்த தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று அதிகாலை 2:30 மணிக்கு விஷ்வரூப தரிசனம் நடைபெற்றது.  தொடர்ந்து சாற்றுமுறை, வேதபாராயணத்தை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத சுவாமி அதிகாலை 4:45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். 

தொடர்ந்து சாற்றுமுறை, வேதபாராயணம் நடைபெற்றது. பின்னர் காலை 5:35 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.  காலை 7:35 மணிக்கு தேர், தேரடியை வந்தடைந்தபின், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மட்டையபடி உற்சவமும், தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், இரவு தெப்பல் உற்சவமும், பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !