உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரி முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!

சிறுவாபுரி முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி கோவிலில், நேற்று, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, முருகனை வழிபட்டனர். சென்னையைச்  சேர்ந்த நகரத்தார் சிறுவாபுரி பாதயாத்திரை சங்கம் சார்பில், நேற்று, சிறுவாபுரி முருகன் கோவிலில், 26ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.  அதை முன்னிட்டு, சென்னையில் இருந்து, பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள், சிறுவாபுரி முருகனுக்கு பால்குடம், காவடி எடுத்து வழிபட்டனர்.  அதை தொடர்ந்து, சிறுவாபுரி முருகனுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், சித்ரா பவுர்ணமி விழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !