உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பூர் பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்!

தும்பூர் பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் பெரியாண்டவர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தும்பூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமி, பொம்மி, வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் சுமி விஸ்வரூப சிலைகள் அமைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  முட்டியூர் அங்காளபரமேஸ்வரி கோவில் பரம்பரை அறங்காவலர் சந்திரசேகர் சுவாமி தலைமையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.  சென்னை அம்பத்துார் ஸ்ரீமுக்தி பாபா, விஸ்வரூப சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தி வைத்தார். விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் பழனி, அர்ச்சகர் நாகராஜ் ஐயர், ஸ்தபதி நாராயணன், ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு குப்புசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !