கண்டரமாணிக்கத்தில் சித்திரைத் திருவிழா
ADDED :3504 days ago
திருப்புத்துார்: கண்டரமாணிக்கம் மாணிக்கவல்லி நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா துவங்கியது.இக்கோயிலில் சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஏப்.,19 காலை காப்புக்கட்டி விழா துவங்கியது. இரவில் பூத வாகனத்தில் அம்பாள் பவனி நடந்தது. தினசரி காலையில் 10.30 மணிக்கு கேடகத்தில் அம்பாள் பவனியும், இரவு 9 மணிக்கு வாகனத்தில் அம்பாள் பவனியும் நடைபெறும். ஏப்.,26ல் தேர்திருவிழாவும், ஏப்.,27ல் பால்குடமும், 10ம் திருநாளில் தீர்த்தவாரியும் நடைபெறும்.