சித்ரா பவுணர்மியில் சுவாமி தரிசனம்: வெள்ளியங்கிரியில் பக்தர்கள் கூட்டம்!
கோவை: சித்ரா பவுணர்மியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவை, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருகைலாயம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும். இந்தாண்டு சித்ரா பவுணர்மியை முன்னிட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மலையடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணியம் தாயார் ஆகியோரை வழிபட்ட பின், ஏழாவது மலை உச்சியில் உள்ள சுயம்பு லிங்க வடிவில் உள்ள சிவபெருமானை வழிபட்டனர்.