உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் வைகை ஆற்றில் பச்சை பட்டில் இறங்கிய அழகர்

சோழவந்தான் வைகை ஆற்றில் பச்சை பட்டில் இறங்கிய அழகர்

சோழவந்தான்: சோழவந்தான் வைகை ஆற்றில் நேற்று சித்ராபவுர்ணமியை முன்னிட்டு, பச்சைபட்டுடன் இறங்கிய அழகரை பக்தர்கள் தரிசித்தனர். சோழவந்தான் ஜெனகநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடக்கின்றன. மூன்றாம் நாளான நேற்று காலை 5.00 மணிக்கு சுவாமி, அழகர் திருக்கோலத்தில் பச்சைபட்டு உடுத்தி வெண்குதிரையில் எழுந்தருளினார்.

எதிர்சேவை: சனீஸ்வர பகவான் கோயிலில் அழகருக்கு எதிர்சேவை நடக்க, மாலை மாற்றுதல் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர் புடைசூழ வைகை ஆற்றில் காலை 9.00 மணிக்கு இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் முடிகாணிக்கை செலுத்தினர்.இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீஸ் பற்றாக்குறையால் பக்தர்கள் நெரிசலில் சிக்கி அழகரை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். வட்டபிள்ளையார் கோயிலில் இருந்து வைகை ஆற்று பாதையில் இருபுறமும் அமைந்த கழிவுநீர் வாய்க்காலில் பக்தர்கள் பலர் விழுந்து காயமுற்றனர். இன்று (ஏப்.,23-) இரவு 9.00மணிக்கு இரட்டை அக்ரஹாரம் சந்தன கோபாலகிருஷ்ணன் கோயில் அரங்கில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !