இவரு தான் தல!
ADDED :5242 days ago
தடைகளை அகற்றும் தந்திரமூர்த்தியாக இருக்கும் விநாயகப் பெருமான், மந்திரமூர்த்தியாகவும் இருக்கிறார். எந்த தெய்வத்திற்குரிய மூல மந்திரமாக
இருந்தாலும், அம்மந்திரம் ஓம் என்னும் பிரணவத்தோடு தான் தொடங்கும். ஓம் என்னும் பிரணவத்தின் சொரூபம் விநாயகர். இவருக்கு மேலான நாயகர்(தலைவர்) வேறு இல்லை என்பதால் தான் இவரை விநாயகர் என்று வணங்குகிறோம். வி என்றால் மேலான என்று பொருள். ஐந்தெழுத்து, ஆறெழுத்து, எட்டெழுத்து என்று எத்தனை எழுத்துகள் அடங்கிய மந்திரங்களாக இருந்தாலும் ஓம் உடன் சேர்த்து சொல்வதே மரபாகும்.