சனி என்றாலே பலருக்கும் குலை நடுங்குகிறதே...ஏன்?
ADDED :3853 days ago
இது அவசியமில்லாத பயம்.சனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று பொருள். அறிவியலும் சனி கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதை ஒப்புக் கொள்கிறது. ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளையும் கடந்தே செல்கின்றன. இதில் சனி அதிக பட்சமாக ஒரு கிரகத்தைக் கடக்க இரண்டரை ஆண்டு எடுத்துக் கொள்கிறது. மேலும் நமது ராசிக்கு முன் ராசியில் இரண்டரை ஆண்டு, பின் ராசியில் இரண்டரை ஆண்டு என மொத்தம் ஏழரை ஆண்டு சனியின் கட்டுப்பாட்டில் நாம் இருக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் துன்பம் ஏற்பட சனி பகவான் காரணமில்லை. பல பிறவிகளிலும் செய்த பாவமே காரணம். இதைப் புரிந்து கொண்டால் யாரும் குலை நடுங்க தேவையில்லை. துன்பம் தீர்ந்த பிறகு சனியைப் போல் அள்ளித் தருவாரும் யாருமில்லை. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரையும், அங்குள்ள சனீஸ்வரரையும் தரிசித்தால் நன்மையே நடக்கும்.