உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசி தான்... கைராசி தான் ..

ராசி தான்... கைராசி தான் ..

காஞ்சிப் பெரியவருக்கு 50 ஆண்டு தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற குமரேசன் கூறிய சம்பவம் இது.  ஒருமுறை காஞ்சி சங்கர மடத்தில் பெரியவரை தரிசிக்க பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் வேலுõர் மாவட்டம் இசையனுõர் கிராமத்தைச் சேர்ந்த சீதா லட்சுமியம்மாளும் ஒருவர். அவர் தன் ஐந்து வயது பேத்தி வித்யாவுடன் வந்திருந்தார். வித்யாவின் தலை வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அருகில் வந்ததும் பெரியவர் பாட்டியிடம்,  குழந்தை தலையில ஏன் துணி போட்டிருக்கு? என்றார். பெரியவா... இவ தலையில கொப்பளம் வெடித்து புண்ணாயிடுச்சு. பாக்காத வைத்தியம் இல்லே... பலனேதும் கிடைக்கல...! என்று சொல்லி வருந்தினார்.பெரியவர் தன் அருகிலுள்ள தேங்காயைக் கையில் எடுத்தார். இந்த தேங்காயை உடைச்சு பாலாக்கி தினமும் தலையில தேய்ச்சு வா! சீக்கிரம் சவுகர்யமாயிடும். குணமானதும் திருத்தணி முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திடு, என்று ஆசியளித்தார். சீதாலட்சுமியம்மாளும் பெரியவர் சொன்னபடி வைத்தியம் செய்தார். குழந்தை வித்யாவுக்கு 15 நாளில் தலையில் இருந்த கொப்பளம் ஆறி விட்டது. பூரண குணம் பெற்றதும் திருத்தணி சென்று குழந்தையின் முடியையும் காணிக்கை செலுத்தினர். அவர்கள் மீண்டும் காஞ்சி மடத்திற்கு பெரியவர் தரிசனம் பெற வந்தனர். பெரியவர் வித்யாவைக் கண்டதும் புன்சிரிப்புடன், தேங்காய் நல்லா வேலை செஞ்சுதா? என்றார். பாட்டியும், பெரியவா... எல்லாம் உங்க கைராசி தான், என்று சொல்லி மகிழ்ந்தார். பெரியவர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசியளித்தார். வளர்ந்து பெரியவளான பின்னும் வித்யா பெரியவரின் கருணை பொங்கும் முகத்தை ஒருநாளும் மறக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !