உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரஸோவைஸ உங்களுக்கு தெரியுமா!

ரஸோவைஸ உங்களுக்கு தெரியுமா!

மதுராபுரியில் பிறந்த கண்ணன், ஆயர்பாடியிலுள்ள யசோதை வீட்டிற்கு வந்ததும், அவளது கணவரான நந்தகோபன் மக்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தார். ஊரே மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தது. இந்த நிகழ்ச்சி இப்போதும் நந்தோற்ஸவம் என்னும் பெயரில் ஆயர்பாடியில் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் அக்காலத்தில் நடந்த விதத்தை பெரியாழ்வார் தன் பாடலில் படம் பிடித்துக் காட்டுகிறார். கோகுலவாசிகள் வேகமாக ஓடி வருகிறார்களாம். விரைந்தோடி வரும் வேகத்தில் கால்கள் தடுமாறி கீழே விழுவதும், கண்ணனைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொள்வதும், ஒருவருக்கொருவர் சின்னக் கண்ணன் என்ன செய்கிறான்? என்று கேட்பதும், பலவித இசைக்கருவிகளை கொட்டி முழக்கி பாடுவதும் ஆட்டம் போடுவதுமாக மகிழ்ந்தனர் என்று பாடுகிறார். கிருஷ்ணனின் ஆயர்பாடி வாழ்க்கையை வேதம் ரஸோவைஸஎன்று குறிப்பிடுகிறது. இதற்கு கண்ணனின் வாழ்க்கையை விட ரசிக்கத்தக்கது உலகில் வேறொன்றும் இல்லை என்று பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !