திருவெண்ணைநல்லுார் பெருமாள் கோவிலில் தேரோட்டம்!
உளுந்துார்பேட்டை: திருவெண்ணைநல்லுார் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவெண்ணைநல்லுார் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினசரி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின் 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஜனகவள்ளி தாயாருடன் வைகுண்டவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் இருந்து புறப்பட்ட தேரினை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்தது.