உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

கைலாசநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

விக்கிரவாண்டி: தொரவி, பெரிய நாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருப்பணி விரைந்து நடக்க வேண்டி சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர். விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருப்பணி நடக்கிறது. இத்திருப்பணி விரைந்து நடக்க வேண்டி, நேற்று காலை 10:00 மணிக்கு புதுச்சேரி மாநில காங்., தலைவர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., முன்னிலையில், சிவனடியார்கள் கல்யாணி அம்மாள், ஜெய்சங்கர் தலைமையில், திருவாசகம் முற்றோதல் செய்தனர். முன்னதாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி  உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொரவி, பனையபுரம், கூனிச்சம்பட்டு, திருக்கனுார், புதுச்சேரி பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . ஏற்பாடுகளை ஏனாதிநாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !