ராஜேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஊத்துக்கோட்டை : பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ளது ராஜேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், 26ம் ஆண்டு சித்திரை பவுர்ணமி விழா, கடந்த, 19ம் தேதி, துவங்கியது. 20ம் தேதி, கிராம தேவதை கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். இரவு, 9:00 மணிக்கு அம்மன் புஷ்ப கரகம், வேப்பலை கரகத்துடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளான, 21ம் தேதி, ராஜேஸ்வரி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், பூங்கரகம், வேப்பிலை கரகம் எடுத்து வீதிஉலாவும், தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பால்குடம் எடுத்தலும், மாலை, திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு அமமன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நாளான, நேற்று மாலை, தீமிதி திருவிழா நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.